நேற்று நடைபெற்று முடிந்த ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் France அணியின் நிலை என்ன?
22 ஆனி 2024 சனி 07:11 | பார்வைகள் : 3974
ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகள் இவ்வாண்டு (2024) ஜெர்மனியில் நடந்து வருகிறது இதில் பிரான்ஸ் அணி 'D' பிரிவில் விளையாடி வருகிறது. கடந்த திங்கட்கிழமை (17/06) தன் முதலாவது களத்தை Autriche அணியுடன் மோதி 1க்கு 0 எனும் கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கியது.
இந்த நிலையில் பிரான்ஸ் அணியின் தலைவர் (Capitaine) Kylian Mbappe கடந்த போட்டியின் போது காயமடைந்த நிலையில் இன்றைய (21/06) Pays-Bas அணியுடன் பிரான்ஸ் மோதும் போது அவர் 'remplaçant' வீரராக அமர்ந்திருக்கும் நிலையில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் முதல் சுற்றில் (45 நிமிடம் )
இரு அணிகளும் எந்த விதமான கோள்களும் ஈட்டாத நிலையில், இரண்டாவது பகுதி ஆரம்பம் ஆனது, இரண்டாவது பகுதியில் 68வது நிமிடத்தில் Pays-Bas அணி ஒரு கோளை இறக்கினாலும் அது செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பல சந்தர்ப்பங்கள் வந்தபோதும் இரு அணிகளும் அதனை தவறவிட்ட நிலையில் இரு அணிகளும் 0-0 என்னும் நிலையில் உதைபந்தாட்டம் நிறைவு கண்டது. இதனால் இரு நாடுகளுமே 8e finale செல்லும் தகுதியை தற்காலிகமாக இழந்தன.
அடுத்த சுற்று ஆட்டத்தில் France அணி Pologne நாட்டு அணியுடனும், Pays-Bas அணி Autriche நாட்டு அணியுடனும் மோத வேண்டும். இதில் France அணி Pays-Bas, Autriche அணியோடு மோதும் போது ஈட்டப்படும் கோள்களை விட அதிகமான கோள்களை ஈட்ட வேண்டும் இல்லையேல் 'D' பிரிவில் France அணி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும்.