Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச்சூடு....! 3 பேர் பலி....

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச்சூடு....! 3 பேர் பலி....

22 ஆனி 2024 சனி 10:37 | பார்வைகள் : 436


அமெரிக்காவில் Grocery Storeயில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூவர் பலியாகினர். 

வெள்ளிக்கிழமை அன்று ஆர்கன்சாஸில் உள்ள ஒரு Grocery Storeயில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

அங்கு மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை, 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மேலும் 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் சுட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 

முதற்கட்ட விசாரணையில், அந்நபர் நியூ எடின்பர்க் நகரைச் சேர்ந்த டிராவிஸ் யூஜின் போஸி என தெரிய வந்தது. 

அவர் மூன்று கொலை குற்றச்சாட்டு வழக்கு பதியப்பட்டது.

''இது மிகவும் சோகமான நிகழ்வு, எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன'' என மாநில காவல்துறை இயக்குநரும், பொதுபாதுகாப்பு செயலாளருமான கர்னல் மைக் ஹாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்