■ €100 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு.. - PSG கழகம் மீது வழக்கு தொடர உள்ள எம்பாபே..!

22 ஆனி 2024 சனி 15:21 | பார்வைகள் : 8029
நட்சத்திர உதைபந்தாட்ட வீரரும், பிரெஞ்சு அணியின் தலைவருமான Kylian Mbappé, தனது முன்னாள் கழகமான PSG மீது வழக்கு தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எம்பாபே தற்போது 'ரியல் மட்ரிட்' கழகத்துக்கு விளையாடுவது உறுதியான நிலையில், PSG கழகத்துடனான ஒப்பந்தம் நிறைவுக்கு வர இன்னும் 8 நாட்கள் மீதமுள்ளன. ஜூலை 1 ஆம் திகதியே அவரது ஒப்பந்தம் முடிவடைகிறது. ஆனால் அவருக்கு கடந்த சில மாதங்களாக PSG கழகம் ஊதியம் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதையடுத்து PSG கழகம் மீது அவர் வழங்கு தொடர உள்ளதாகவும், இழப்பீடாக €100 மில்லியன் யூரோக்கள் கோர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், இன்னும் ஒப்பந்தம் முடிவுக்கு வராத நிலையில், ஜூன் மாதத்துக்காக சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என அவர் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எம்பாபேயின் இந்த நடவடிக்கையினால் PSG கழகத்தின் இயக்குனரான தொழிலதிபர் Nasser Al-Khelaïfi மிகுந்த கோபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.