'படைத்தலைவன்’ படத்திலும் விஜயகாந்த்..

23 ஆனி 2024 ஞாயிறு 10:32 | பார்வைகள் : 6049
தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் வருகிறார் என்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ’கோட்’ படத்தை அடுத்து இன்னொரு படத்திலும் விஜயகாந்த் ஏஐ காட்சிகள் இடம் பெற போவதாகவும் அந்த பணிகள் இன்று முதல் தொடங்கி இருப்பதாகவும் தெரிகிறது.
தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் காட்சிகள் ஒரு சில நிமிடம் இருப்பதாகவும், அவரது கேரக்டர் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்பட்டது. மேலும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா இந்த காட்சிகளை பார்த்து ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ’கோட்’ படத்தை அடுத்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் 'படைத்தலைவன்’ என்ற படத்திலும் விஜயகாந்தை பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு கேரக்டர் இருந்ததை அடுத்து அந்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த கேரக்டரில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சண்முக பாண்டியன் நடித்த முதல் திரைப்படமான ’சகாப்தம்’ படத்தில் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1