Paristamil Navigation Paristamil advert login

யாழில் சிறுவன் திடீர் மரணம் - வெளியான காரணம்

யாழில் சிறுவன் திடீர் மரணம் - வெளியான காரணம்

23 ஆனி 2024 ஞாயிறு 12:05 | பார்வைகள் : 5811


யாழில் திடீர் உடல்நல பாதிப்பினால் விசேட தேவையுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், அச்சுவேலி மேற்கை சேர்ந்த 16 வயதுடைய கபிலன் கபிஷன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். 

விசேட தேவையுடைய குறித்த சிறுவன் கடந்த 21ஆம் திகதி திடீரென உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி வீட்டில் தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளான். 

அதை அடுத்து பெற்றோர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை சிறுவன் உயிரிழந்துள்ளான். 

உடல்கூற்று பரிசோதனையின் போது குடல் அலர்ஜி ஏற்பட்ட மரணம் சம்பவத்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்