Yvelines : பெண் ஒருவரை தாக்கிய ஓநாய்கள்!

23 ஆனி 2024 ஞாயிறு 13:39 | பார்வைகள் : 6002
பெண் ஒருவரை பல்வேறு ஓநாய்கள் இணைந்து கடித்து குதறியுள்ளன. Yvelines மாவட்டத்தில் உள்ள Thioiry மிருகக்காட்சிச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜூன் 23, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பார்வையாராக வருகை தந்த குறித்த பெண், நேற்று இரவு அங்குள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். பின்னர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் அனுமதி பெறாமல் நடைபயிற்சியில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது.
அதன்போது அவரை சுற்றி வளைத்த ஓநாய்கள் சில, அப்பெண்ணை சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளன. பின்னர் அப்பெண் உடனடியாக மீட்கப்பட்டு அவசரப்பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.