Paristamil Navigation Paristamil advert login

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சீனா

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சீனா

23 ஆனி 2024 ஞாயிறு 14:44 | பார்வைகள் : 596


தாய்வானின் சுதந்திரத்திற்காக தீவிரமாக குரல்கொடுப்பவர்கள் முயற்சி செய்பவர்களிற்கு - பிரிவினைவாதிகளிற்கு மரணதண்டனை விதிக்கப்போவதாக சீனா எச்சரித்துள்ளது.

சீனாவின் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் பொதுமற்றும் அரசபாதுகாப்பு அமைப்புகள் நாட்டை துண்டாடுவதற்காக தாய்வானின் சுதந்திரத்திற்காக குரல்கொடுக்கும் தீவிரபிரிவினைவாதிகளை தண்டிக்கவேண்டும் என்ற புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன என ஜிங்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு நாட்டிற்கும் மக்களிற்கும் கடும் தீங்கு விளைவிக்கும் சுதந்திர முயற்சிகளின் தலைவர்களிற்கு மரணதண்டனையை விதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது என ஜிங்வா தெரிவித்துள்ளது.

தாய்வானின் சுதந்திரத்திற்காக குரல்கொடுக்கும் ஏனையவர்களிற்கு பத்து வருட சிறைத்தண்டனை முதல் ஆயுள்தண்டனை வரை விதிக்கப்படலாம்.

ஏற்கனவே சீனாவின் சட்டத்தில் காணப்படும் விடயங்களின் அடிப்படையிலேயே புதிய உத்தரவுகள் வெளியாகியுள்ளன.

தாய்வான் பிரிவினையை அறிவித்தாலோ அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலோ அதற்கு எதிராக இராணுவநடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அடிப்படையை இந்த புதிய உத்தரவுகள் சீனாவிற்கு வழங்கியுள்ளன.

பிரிவினை குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை மரணதண்டனை என சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சட்டநடவடிக்கை என்ற கூர்மையான வாள் எப்போதும் உயரத்தொங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள தாய்வான் மக்கள் அச்சமடையக்கூடாது என தெரிவித்துள்ளது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்