Paristamil Navigation Paristamil advert login

தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்!

தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்!

23 ஆனி 2024 ஞாயிறு 17:51 | பார்வைகள் : 7727


தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக பெண்ணிய அமைப்பினர் பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவம் தொடர்பில் போராடி வரும் பெண்கள் அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று ஜூன் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்தனர். நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் தீவிர வலதுசாரிகள் வெற்றி பெறுவதற்குரிய சந்தர்ப்பம் இருப்பதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த RN கட்சிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத கட்சி அது எனவும், அது ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்