■ நான் உங்களை நம்புகிறேன் - மக்ரோன் கடிதம்!
23 ஆனி 2024 ஞாயிறு 18:10 | பார்வைகள் : 5371
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘நான் உங்களை நம்புகிறேன். (Je vous fais confiance) என குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதத்தில் இருந்து...
“நான் இரு வாரங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தை கலைத்தேன். நான் இந்த முடிவினை பொறுப்புடன் பல வாரங்கள் சிந்தித்தே எடுத்தேன். நிபந்தனைகள் எதையும் ஏற்படுத்தாமல், நாட்டின் நலன் கருதி இந்த முடிவினை நான் எடுத்திருந்தேன்.
வரவு செலவுத்திட்டத்தில் நெருக்கடியில் உள்ள அரசாங்கத்தை வீழ்த்த எதிர்கட்சிகள் தயாராகி வந்தன. இதுபோன்ற சீர்குலைவு இனி தொடர முடியாது. பின்னர் ஜனாதிபதி பெரும்பான்மை ஐரோப்பிய தேர்தலில் பெரும்பான்மையை இழந்து.
நான் இதனை கருத்தில் கொள்ளாது நிராகரித்திருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. நான் மக்களை நம்புகிறேன்.
நான் பிரதமரை மாற்றி, அரசாங்கத்தையும் மாற்றி அமைத்திருக்கலாம். இதற்கு முன்னர் பல ஆட்சியாளர்களை அதனை செய்திருக்கின்றார்கள். அதனால் எனக்கு அது எளிதாக இருந்திருக்கும். ஆனால் நான் அதனைச் செய்யவில்லை.
இந்த ஐந்தாம் குடியரசில் அரசு இதுவரை எதிர்கொள்ளாத இறுக்கத்தை எதிர்கொண்டுள்லது. எனக்கு உங்கள் கோபம் புரிகிறது. கேட்கிறது. ஆனால் இந்த உங்களின் முடிவு நாட்டை முன்னோக்கிச் செல்ல வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. நான் உங்களை நம்புகிறேன். எங்களது நாட்டின் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வாக்கை பயன்படுத்துங்கள்.
Rassemblement National கட்சி தேசத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படுகிறது. அவர்கள் அகதிகளையும், குடியேற்றங்களையும் மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால் புவி வெப்பமடைதல் அதன் விளைவுகள் குறித்து மறந்துவிட்டார்கள். வாங்கும் திறன், எரிசக்தி தொடர்பில் அமைதி காக்கிறார்கள்.
அதனை அறிந்து ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதி ஆகிய நாட்கள் உங்கள் வாக்கினை சரியாக பயன்படுத்தவும்”
என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.