Paristamil Navigation Paristamil advert login

■ இரண்டு மாதங்களின் பின்னர் முற்று முழுதாக திறக்கப்படும் A13 நெடுஞ்சாலை..!!

■ இரண்டு மாதங்களின் பின்னர் முற்று முழுதாக திறக்கப்படும் A13 நெடுஞ்சாலை..!!

23 ஆனி 2024 ஞாயிறு 18:34 | பார்வைகள் : 7406


கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள A13 நெடுஞ்சாலை நாளை திங்கட்கிழமை முற்று முழுதாக திறக்கப்படுகிறது. 

Hauts-de-Seine மாவட்டத்தின் Saint-Cloud சுரங்கத்துக்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள வீதியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏப்ரல் 19 ஆம் திகதியில் இருந்து குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை அறிந்ததே. இந்நிலையில், மே 10 ஆம் திகதி பரிஸ் நோக்கிய பகுதி மட்டும் திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை ஜூன் 24, திங்கட்கிழமை மாலை முதல் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்று வீதி முற்று முழுதாக திறக்கப்படுவதாக Hauts-de-Seine மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Hauts-de-Seine நகரசபை வீதியின் புணரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது. இரண்டு மாதங்களாக பெரும் நெருக்கடிகளை சந்தித்த மக்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியாக செய்தி எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்