■ ஓர்லி விமான நிலையத்துக்கு பயணிக்கும் 14 ஆம் இலக்க மெற்றோ..!

24 ஆனி 2024 திங்கள் 05:52 | பார்வைகள் : 6883
14 ஆம் இலக்க தானியங்கி மெற்றோ, இன்று ஜூன் 24, திங்கட்கிழமை முதல் பரிசில் இருந்து ஓர்லி விமான நிலையத்துக்கு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை இந்த விஸ்தரிக்கப்பட்ட மெற்றோ சேவை திறந்துவைக்கப்பட உள்ளது. 8 புதிய நிலையங்களுடன் மொத்தமாக 28 கிலோமீற்றர்கள் தூரம் மெற்றோ பயணிக்க உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பயணிகள் பயன்பெற முடியும் என RATP நிறுவனம் தெரிவித்துள்ளது.
Châtelet நிலையத்தில் இருந்து 25 நிமிடங்களில் ஓர்லி விமான நிலையத்தை மெற்றோ சென்றடையும் எனவும், இதற்காக €3.5 பில்லியன் யூரோக்கள் செலவில் விஸ்தரிப்பு பணிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.