Paristamil Navigation Paristamil advert login

முலான் றுஷ் விடுதிக்கு புதிய காற்றாடி..!

முலான் றுஷ் விடுதிக்கு புதிய காற்றாடி..!

24 ஆனி 2024 திங்கள் 09:50 | பார்வைகள் : 12837


பரிசில் உள்ள களியாட்ட விடுதியான முலான் றுஷ் (Moulin Rouge) இன் கூரையில் அமைக்கப்பட்டிருந்த இராட்சத காற்றாடி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் உடைந்து விழுந்திருந்தது. இந்நிலையில், தற்போது அங்கு புதிய காற்றாடி அமைக்கப்பட உள்ளது.

இன்று திங்ககிழமை காலை அங்கு காற்றாடியின் இறக்கைகள் அமைக்கும் பணி ஆரம்பமானது. வரும் ஜூலை 5 ஆம் திகதி அது திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறத்திலான நான்கு இறக்கைகளும் பாரம் தூக்கியினால் தூக்கப்பட்டு பொருத்தப்பட்டது.

குறித்த Moulin Rouge களியாட்ட விடுதியானது திறக்கப்பட்டு வரும் ஒக்டோபர் மாதத்துடன் 135 வருடங்கள் நிறைவுசெய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்