Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி...

சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி...

24 ஆனி 2024 திங்கள் 11:44 | பார்வைகள் : 1316


நடிகர் சிவகார்த்திகேயன், சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 5-க்கும் மேற்பட்ட படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறது. கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் படங்களின் வரிசையில், உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் தான் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்ற நடிகர் சூரி இத்திரைப்படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார். மேலும், பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கொட்டுக்காளி திரைப்படம் அடுத்தடுத்து பல சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் தேர்வாகி வருகிறது. 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து, ருமேனியா நாட்டில் நடைபெற உள்ள டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும், ஃபெஸ்ட் திரைப்பட விழாவிலும் தேர்வானது. இந்நிலையில், ட்ரான்சில்வேனியா திரைப்பட விழாவில், கொட்டுக்காளி படத்திற்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது. இதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்