Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!

பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!

25 ஆனி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 7192


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

நேற்று ஜூன் 24, திங்கட்கிழமை இரவு 9 மணி அளவில் இத்துப்பாக்கி பிரயோகம்  Boulevard d'Indochine பகுதியில் இடம்பெற்றது. அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் துப்பாக்கி முழக்கத்தினை கேட்டுவிட்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து கிடந்த ஒருவரை மீட்டனர். அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு ஆயுததாரி(கள்) ட்ராம் மூலமாக வருகை தந்ததாகவும், அவர்கள் Pré-Saint-Gervais நகர் நோக்கி தப்பி ஓடியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருக்கையில் அமர்ந்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஆயுததாரிகள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்