வரலாற்று சாதனை படைத்து அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி!
25 ஆனி 2024 செவ்வாய் 07:47 | பார்வைகள் : 1092
டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டம் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் நிறைவில் 113 ஓட்டங்களை பெற்று, 114 என்ற இலக்கை பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயித்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரகமதுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
வெற்றியிலக்கான 114 ஓட்டங்களை நோக்கி பதிலெலுத்தாடிய பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
மேலும் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளதோடு உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.