Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் வாழும் ஆண்களுக்கு  காத்திருக்கும் அபாயம்....

பிரித்தானியாவில் வாழும் ஆண்களுக்கு  காத்திருக்கும் அபாயம்....

25 ஆனி 2024 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 4820


பிரித்தானியாவில்  கொரோனா வைரஸ் ஒன்றின் மாறுபாடு ஒன்று வேகமாகப் பரவி வருகின்றது.

குறித்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், மீண்டும் ஒரு புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு வேகமாகப் பரவ ஆரம்பமாகியுள்ளது. 

ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனாவைரஸ்களின் மாறுபாடுகளில் ஒன்றான KP. 3 என்னும் கொரோனாவைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த புதிய கொரோனாவைரஸ் பெண்களைவிட ஆண்களை எளிதாக தொற்றிக்கொள்வது தெரியவந்துள்ளது.

கொரோனாவைரஸின் அறிகுறிகள் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், தற்போதைய அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதிக உடல் சூட்டுடனான குளிர் காய்ச்சல், புதிதாக உருவாகியுள்ள அறிகுறியான தொடர் இருமல், சுவை, வாசனை அறிவதில் மாற்றம் அல்லது இழப்பு, மூச்சுத்திணறல், சோர்வாக உணர்தல், உடல் வலி, தலைவலி, தொண்டை அழற்சி, மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, எப்போதும் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்ற உணர்வு ஆகியவைதான் இப்போது மருத்துவர்களால் கொடுக்கப்பட்டுள்ள கொரோனாவைரஸுக்கான அறிகுறிகளாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்