Paristamil Navigation Paristamil advert login

எமி ஜாக்சன் ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசைபட்டாரா?

எமி ஜாக்சன் ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசைபட்டாரா?

25 ஆனி 2024 செவ்வாய் 08:25 | பார்வைகள் : 822


நடிகையும் மாடலுமான எமி ஜாக்சன். மாடலிங் துறையில் கலக்கி கொண்டிருந்த இவரை கடந்த 2010ம் ஆண்டு வெளியான 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய். இந்த படம் எமி ஜாக்சனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து ஆங்கிலம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் பிசியாக நடித்து நடிக்க துவங்கினார். குறிப்பாக தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே கிளாசியான நடிப்பால் கோலிவுட் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட எமி ஜாக்சன், பின்னர் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, கெத்து போன்ற படங்களில் நடித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு எமி ஜாக்சன் George Panayiotou, என்பவரை காதலித்த நிலையில்... திருமணத்திற்கு முன்பே Andreas என்ற ஆண் குழந்தைக்கு அம்பாவானார். பின்னர் ஜார்ஜுடன் பிரேக் கப் செய்த எமி, தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார். 

விரைவில் இந்த தம்பதிக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் நிகழ்வில் தனது 4 வயது மகனுடன் எமி ஜாக்சன் கலந்து கொண்டு அசரவைத்தார்.

மேலும் மீண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் எமி ஜாக்சன்... மாடலிங் துறையிலும் கொடி கட்டி பறக்கிறார்.இவரின் தற்போதைய முக மாற்றம் பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்க்கு காரணம் பிளாஸ்டிக் சர்ஜரியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

குறிப்பாக இவரின் பியூட்டி போன்ஸ், ஏஞ்சலினா ஜோலி போல் மாற்றம் அடைத்துள்ளதை கண்டு பிடித்து, ஒரு வேலை... ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசை பட்டு இப்படி ஆகிவிட்டாரா? எமி என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.

இப்போது அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றம் அடைந்துள்ள முகத்தை விட... மதராசா பட்டினம், ஐ போன்ற படங்களில் நடித்த போது இருந்த அந்த அழகிய முகத்தை மிஸ் செய்வதாகும் கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்