Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இணையம் ஊடாக மோசடி - 30 வெளிநாட்டவர்கள் கைது!

இலங்கையில் இணையம் ஊடாக மோசடி - 30 வெளிநாட்டவர்கள் கைது!

25 ஆனி 2024 செவ்வாய் 11:42 | பார்வைகள் : 4834


இலங்கையில் இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 வெளிநாட்டவர்கள் நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 
கொச்சிக்கடை – பல்லம்சேன மற்றும் பலகதுரே ஆகிய பிரதேசங்களில் உள்ள இரண்டு விருந்தகங்களில் தங்கியிருந்து இந்த நிதி மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
இதன்போது நிதி மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட 10 கணினிகளை காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்