இலங்கையில் உயர்தரப் பரீட்சை மாணவன் எடுத்த விபரீத முடிவு

25 ஆனி 2024 செவ்வாய் 14:16 | பார்வைகள் : 5324
கம்பளை பிரதேசத்தில் உயர்தரப் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் தனது அறையின் கதவைப் பூட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார்.
இவரது தாய் ஆசிரியை எனவும், தந்தை வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவன ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சகோதரன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், ஒரே சகோதரி குருநாகல் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகவும் கடமையாற்றுகின்றனர்.
தந்தை மறைத்து வைத்திந்த அவரது துப்பாக்கியை கண்டு பிடித்த மாணவன், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 08 ஏ சித்தி மற்றும் B சித்தியுடன் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிய இவர், பரீட்சை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1