கனடாவில் விளையாட்டு திடல் அருகில் பரபரப்பு...!

26 ஆனி 2024 புதன் 09:01 | பார்வைகள் : 5972
கனடாவின் டொரண்டோவில் உள்ள விளையாட்டு திடல் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் டொரண்டோவில் உள்ள ஜேன் வீதி மற்றும் பால்ஸ்டாஃப் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயது நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பது தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டொரண்டோ காவல்துறையின் தகவல் படி, நள்ளிரவுக்கு சற்று முன்னதாக இரவு 11:58 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக அவசரகால சேவைகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கி காயங்களால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்தில் கண்டறிந்தனர்.
உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய 4 பேரை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.