Paristamil Navigation Paristamil advert login

டி20 உலகக்கிண்ணம்: போட்டியின்றி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்திய அணி?

டி20 உலகக்கிண்ணம்: போட்டியின்றி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்திய அணி?

27 ஆனி 2024 வியாழன் 07:55 | பார்வைகள் : 166


T20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் போட்டியின்றியே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று இரவு 8 மணிக்கு மோதவுள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

அதையடுத்து இன்று இரவு நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து போட்டியில் வெற்றிப் பெறும் அணி இறுதிக் களத்தில் தென்னாப்பிரிக்காவுடன் போட்டியிடும்.  

குறித்த போட்டியில் எந்த அணி வெற்றிப் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் வானிலையின் மாற்றத்தால் போட்டியின்றி இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழையலாம் என கூறப்படுகிறது.  

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.  

தற்பொழுது கயானாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கடுமையான மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று போட்டிகள் நடைபெறுவதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரிசர்வ் நாளும் அறிவிக்கப்படவில்லை.

கூடுதலாக 250 நிமிடங்கள் வரை ICC நேரம் ஒதுக்கியுள்ளது. 

ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறும்.

மேலும் சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்துள்ளதால், இந்திய அணிக்கு இது சாதமானதாக அமையும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்