தேர்தலுக்கு பின்னர் பெரும் வன்முறைகள் பதிவாகலாம்... அச்சத்தில் மக்கள்...!
27 ஆனி 2024 வியாழன் 08:29 | பார்வைகள் : 2550
பொதுத் தேர்தலின் முதற்சுற்று வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது. இந்த வாக்கெடுப்பின் பின்னர் நாடு முழுவதும் வன்முறைகள் பதிவாகலாம் என மக்களிடையே அச்சம் நிலவுவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இன்று ஜூன் 27 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பின் படி, 61% சதவீதமான மக்கள், இந்த வன்முறை தொடர்பில் கவலையடைவதாக தெரிவித்துள்ளனர்.
38% சதவீதமானவர்கள் இந்த வன்முறை தொடர்பில் அச்சமடையவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஏனைய 1 சதவீதமானவர்கள் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
தீவிர வலதுசாரிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் வலதுசாரிகளுக்கு எதிராக இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், முதலாம் சுற்று வாக்கெடுப்பின் பின்னர் நாட்டில் பலத்த ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.