சாம்சங் ஃபோல்டபில் சாதனங்கள் வெளியீட்டு
27 ஆனி 2024 வியாழன் 08:37 | பார்வைகள் : 695
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி இந்த ஆண்டின் இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.
வழக்கம்போல இந்த நிகழ்வும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் சேல் உள்ளிட்டவைகளில் ஸ்டிரீம் செய்யப்படும். இந்திய நேரப்படி கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6, கேலக்ஸி Z ப்ளிப் 6, கேலக்ஸி வாட்ச் 7, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி பட்ஸ் 3, கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.
கேலக்ஸி ரிங் மாடல் இந்திய சந்தையில் ரூ. 35 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் ப்ளூடூத் 5.4 மற்றும் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்று தெரிகிறது.