Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் வெளியானது மற்றும் ஒரு அதிர்ச்சியூட்டும் கருத்துக்கணிப்பு RN+LR (soutenue LR) 36% சதவீதம்.

மீண்டும் வெளியானது மற்றும் ஒரு அதிர்ச்சியூட்டும் கருத்துக்கணிப்பு RN+LR (soutenue LR) 36% சதவீதம்.

27 ஆனி 2024 வியாழன் 08:38 | பார்வைகள் : 5428


பிரான்சின் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று  இன்னும் மூன்று நாட்களில் (30/06) நடைபெறவுள்ள நிலையில்  மற்றும் ஓர் கருத்து கணிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி Rassemblement National (RN) கட்சியும், அதனைத் தாங்கிப்பிடிக்கும்  Les République கட்சியின் ஒருபகுதியான Éric Ciotti தலைமையிலான கட்சியுமே இணைந்து 60% சதவீதம் ஆட்சியமைக்கும், என தெரிவிக்கும் கருத்துக்கணிப்பில், அறுதிப் பெரும்பான்மையோடு RN மட்டும் ஆட்சியமைக்கும் என 20% சதவீத மக்களும் தெரிவித்துள்ளனர் என இன்று வெளியான கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. 

பிரான்சின் பல பாகங்களில் பல்வேறுபட்ட தரப்பினரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில், தீவிர வலதுசாரி கட்சிகளான Rassemblement National (RN) கட்சியும், அதனைத் தாங்கிப்பிடிக்கும்  Les République இணைந்து 36%. சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும், இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான Nouveau Front Populaire 29% சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும், மூன்றாம் இடத்தில் நடைமுறை ஆட்சியில் இருக்கும் Ensemble 19.5%. சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கட்சிகளான RN கட்சியை தங்கிப்பிடிக்க மறுக்கும் Les République கட்சியினர் 8% சதவீதமும், மற்றுமோர் தீவிர வலதுசாரி கட்சியான Éric Zemmour தலைமையில் இயங்கும்  Reconqueir கட்சி 1.5% சதவீதம் பெறுவார்கள் என்றும், மற்றும் ஓர் தீவிர இடதுசாரி கட்சியான Extrême gauche 1% சதவீதம் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்