Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவில் தடம் புரண்ட தொடருந்து விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயம்

ரஷ்யாவில் தடம் புரண்ட தொடருந்து விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயம்

27 ஆனி 2024 வியாழன் 08:51 | பார்வைகள் : 384


ரஷ்யாவில் தொடருந்து ஒன்றின் 9 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் பயணித்த 70-க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி காயமடைந்து உள்ளனர்.

 அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனினும், உயிரிழப்புகள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் வடகிழக்கு பகுதியான கோமி பகுதியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோஸிஸ்க் நகர் வரையிலான 5 ஆயிரம் கி.மீ. தொலைவை இந்த தொடருந்து கடந்து சென்றுள்ளது.

இதுபற்றி ரஷிய ரெயில்வே வெளியிட்ட செய்தியில், கோமி ரிபப்ளிக் பகுதியில் இன்டா நகர் அருகே,511 என்ற எண் கொண்ட பயணிகள் ரெயிலானது உள்ளூர் நேரப்படி மாலை 6.12 மணியளவில் விபத்தில் சிக்கியது என தெரியவந்துள்ளது.

குறித்த தொடருந்தில் 14 பெட்டிகள் மொத்தம் 232 பயணிகள் ரெயிலில் பயணித்து உள்ளனர் கனமழை பெய்து வந்த நிலையில், அதனால் தொடருந்து தடம் புரண்டு இருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்