Paristamil Navigation Paristamil advert login

கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும்  ஜஸ்டின் ட்ரூடோ...?

கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும்  ஜஸ்டின் ட்ரூடோ...?

27 ஆனி 2024 வியாழன் 09:03 | பார்வைகள் : 1619


கனடாவில் செவ்வாய்க்கிழமை அன்று  நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ள விடயம் ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St. Paul's தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.  

Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், தற்போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul's தொகுதியக் கைப்பற்றியுள்ளார்கள்.

30 ஆண்டுகளாக லிபரல் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட Toronto-St. Paul's தொகுதியை கன்சர்வேட்டிவ் கட்சியினர் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால், தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார் ட்ரூடோ.

நானும் எனது குழுவினரும், கனேடியர்கள் காணவும் உணரவும் தக்க வகையில் உண்மையான முன்னேற்றத்தை கொடுப்பதற்காக இன்னமும் அதிக அளவில் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் அவர்.  

ஆனால், கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும், ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவரது கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளதாக  பெயர் வெளியிட விரும்பாத லிபரல் கட்சியினர் சிலர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்