■ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி - தொடருந்து சேவைகளில் பதிய வசதி..!
27 ஆனி 2024 வியாழன் 10:36 | பார்வைகள் : 2854
செயற்கை நுண்ணறிவை இல் து பிரான்ஸ் பொதுபோக்குவரத்து சேவை தனது சேவைகளில் இணைத்துக்கொண்டு வருகிறமை அறிந்ததே. தற்போது தொடருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை செயற்கை நுண்ணறிவு மூலம் கணக்கிட்டு, பயணிகளுக்கு தெரியப்படுத்தும் வசதி ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.
முதற்கட்டமாக RER சேவைகளில் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது. தொடருந்தின் ஒவ்வொரு பெட்டிகளிலும் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையை கண்காணித்து, அவற்றை அடுத்ததாக உள்ள தொடருந்து நிலைய தொலைக்காட்சிப்பெட்டியில் காட்சிப்படுத்தும். இதனால் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும், நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
RER A, B, C மற்றும் D ஆகிய தொடருந்து சேவைகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் எனவும், முதற்கட்டமாக 40 நிலையங்களில் அவை காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.