Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு உள்ளான 4 வயது சிறுமி உயிரிழப்பு

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு உள்ளான 4 வயது சிறுமி உயிரிழப்பு

27 ஆனி 2024 வியாழன் 16:13 | பார்வைகள் : 374


கிளிநொச்சி - கண்டாவளை, குமாரசாமிபுரம் பகுதியில் நாய்க்கடிக்கு உள்ளாகி சிறுமி உயிரிழந்துள்ளார்.

குமாரசாமிபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமியே நாய்க்கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மே மாதம் 10 ஆம் திகதி  நாய்க்கடிக்கு உள்ளான குறித்த சிறுமி, கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென சுகவீனமுற்ற நிலையில் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த சிறுமி உள்ளடங்கலாக ஐவரை குறித்த நாய் கடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து நாய்க்கடிக்கு உள்ளான நால்வரும் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.

இதேவேளை, கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் குறித்த சிறுமியுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்