Paristamil Navigation Paristamil advert login

தொடங்கியது இனத்துவசம் "நீ எந்த நாடு?" "உனக்கு இங்கு என்ன வேலை?" முட்டை, தக்காளி வீச்சு.

தொடங்கியது இனத்துவசம்

27 ஆனி 2024 வியாழன் 19:46 | பார்வைகள் : 5363


ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பிரான்சில் அதிகப்படியான ஆசனங்களை தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement National (RN) கட்சி பெற்றதும், வர இருக்கின்ற பிரான்சின் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வெளிவரும் கருத்துக்கணிப்புகளில் அவர்களே அதிக வாக்குகளை பெறுவார்கள் என்ற நிலையில். "பிரான்ஸ் தேசத்தில் இனத்துவசத்தை தூண்டிவிட்டு இருக்கிறது"என பாதிக்கப்பட்ட  சாட்சியங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஒரு பெண்மணி வேலைக்கான நேர்முகப் பரிட்சைக்கு சென்றபோதும் அவரைப் பற்றிய முழு தகவல்களும் இருந்த போதும் "நீ எந்த நாடு?" எனும் அந்த வேலைக்கு தேவையற்ற கேள்வி கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பலரிடம் "உங்களுக்கு இங்கு (பிரான்சில்)என்ன வேலை" என்றும், "வந்தோம்.. வந்த வழி போவீர்கள்" என்றும் பலவேளைகளில் 'gros mots' எழுத முடியாத கடும் சொற்களால் வெளிநாட்டவர்களை திட்டி தீர்த்ததாகவும் சாட்சியங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளன. 

சிறிய நகரங்களில், வீடுகள் உள்ள பகுதியில் இருக்கக்கூடிய வெளி நாட்டவர்களின் வீடுகளின்  'boîte aux lettres' கடிதப் பெட்டிகளில், வீதியில் வாகனங்களின் 'pare-brise' முன் கண்ணாடிகளில் திடீர் திடீரென முளைக்கும் கையெழுத்து துண்டுகள் அத்தனையும் கெட்ட வார்த்தைகள். மேலும் ஒரு படி மேலே சென்று மறைந்திருந்து வெளிநாட்டவர்கள் மீது மூட்டையால் வீசுதல், தக்காளிப் பழத்தினால் எறிவது என "இனத்துவசம் ஒரு வடிவம் எடுத்து இருக்கிறது" என ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட சாட்சியங்கள் வழங்கியதாக செய்தியில் தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்