மீனவர்கள் விரைவில் விடுவிப்பு: ஜெய்சங்கர் உறுதி...

28 ஆனி 2024 வெள்ளி 03:10 | பார்வைகள் : 4888
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த 18ல் கைது செய்தனர். இவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மூன்று முறை கடிதம் எழுதினார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்:
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனில் மத்திய அரசு என்றும் அக்கறை கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.