ஒவ்வாமை மருந்தை 'Périactine' பின்னழகை பெரிதாக வளர்க்க பயன்படுத்துகிறார்கள், எனவே இனி தடை. ANSM
28 ஆனி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 2433
ஒவ்வாமை நோய்க்கு எதிரான செயல்பாட்டினை உடலில் ஏற்படுத்தும் சிறந்த நிவாரணி மருந்தாக 'Périactine' மாத்திரை இதுவரை இருந்து வருகிறது. பின்விளைவுகளை கொண்டிராத
'Périactine' மாத்திரைகளை துறைசார் மருத்துவரின் பரிந்துரை, மருந்து சீட்டு இன்றி மருந்தகங்களில் நோயாளர்கள் வாங்கக்கூடியதாக இருந்தது, ஆனால் வரும் ஜூலை 10ம் திகதி முதல் மருந்து சீட்டு இன்றி குறித்த மாத்திரைகளை வாங்க முடியாது 'ANSM' மருந்துப் பாதுகாப்பு ஏஜென்சி அறிவித்துள்ளது.
ஆரோக்கியத்திற்கு பயன்படுத்த வேண்டிய குறித்த மாத்திரைகளை அழகியல் நோக்கங்களுக்காக "எடை அதிகரிப்பதற்காக" அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக பெண்கள் தங்களின் பின்னழகை எடுப்பாக காட்டுவதற்காக தவறாக பயன்படுத்துவதால், அது அவருகளுக்கும் ஆபாத்தானது எனவேதான் ஜூலை 10ம் திகதி முதல் துறைசார் மருத்துவரின் மருந்து சீட்டு இன்றி குறித்த மாத்திரைகளை மருந்தகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்களிலிருந்து குணப்படுத்துவதற்காகவும், நோயாளர்கள் வலி தெரியாமல் இருப்பதற்காகவும், என ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள், இன்றைய நவீன உலகத்தில் போதைக்காகவும் அழகை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவது கவலை அளிப்பதாகும் இதனை இந்த தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டுமென்று 'ANSM' மருந்துப் பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.