Paristamil Navigation Paristamil advert login

 27 அவுஸ்திரேலியர்களிற்கு எதிராக தடை விதித்த ரஷ்யா 

 27 அவுஸ்திரேலியர்களிற்கு எதிராக தடை விதித்த ரஷ்யா 

28 ஆனி 2024 வெள்ளி 09:21 | பார்வைகள் : 4445


அவுஸ்திரேலியாவின் இரு முன்னாள் பிரதமர்கள் உட்பட 27 பேருக்கு எதிராக ரஷ்யா தடைகளை அறிவித்துள்ளது.

ரஷ்ய எதிர்ப்பு நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்காக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் டொனி அபொட் ஜோன் ஹவார்ட் உட்பட 27 பேருக்கு எதிராக தடைகளை ரஸ்யா அறிவித்துள்ளது.

அரசியல்வாதிகள் பெரும்நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் கல்விமான்கள் பத்திரிகையாளர்களிற்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் ரஸ்ய எதிர்ப்பு நிகழ்ச்சிநிரலை கைவிடாவிட்டால் தடை பட்டியலில் மேலும் பலரை சேர்க்கவுள்ளதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

ரஷ்யநிறுவனங்கள் ரஸ்ய பிரஜைகளிற்கு எதிரான அரசியல்நோக்கம் கொண்ட தடைகளிற்கு பதிலாக 27 அவுஸ்திரேலியர்கள் ரஸ்யாவிற்குள் நுழைவதற்கு தடைவிதித்துள்ளதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை உக்ரைனிற்கு வழங்ககோரி அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதிய 23 பேர் இந்த தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ரஷ்யாவின் நலன்களிற்கு எதிராக தீர்ப்புகளை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்