Paristamil Navigation Paristamil advert login

 Sandwich சாப்பிட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் நல பாதிப்பு -  முதல் நபர் மரணம்

 Sandwich சாப்பிட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் நல பாதிப்பு -  முதல் நபர் மரணம்

28 ஆனி 2024 வெள்ளி 09:39 | பார்வைகள் : 951


பிரித்தானியாவில், சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள்  உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி, சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 275 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் (lettuce leaves) மூலமாக பரவிய ஈ கோலை என்னும் கிருமியே பிரச்சினைக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என உணவு தரநிலை ஏஜன்சி (The Food Standards Agency - FSA) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லெட்டூஸ் இலைகள் மூலமாக பரவிய ஈ.கோலை கிருமித் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தில், ஈ.கோலை கிருமித் தொற்று ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் இரண்டு பேர் உயிரிழந்ததாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, அவர்களில் ஒருவர் சமீபத்தில் சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் மூலம் பரவிய ஈ.கோலை கிருமித்தொற்றால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்