Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் தீபம் பரிசுக்கு வருவது எப்போது..?!

ஒலிம்பிக் தீபம் பரிசுக்கு வருவது எப்போது..?!

28 ஆனி 2024 வெள்ளி 10:12 | பார்வைகள் : 2547


மார்செ துறைமுகம் வழியாக கடந்த மே 8 ஆம் திகதி பிரான்சுக்கு கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் தீபம், தற்போது நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 10,000 பேர் இந்த ஒலிம்பிக் தீபத்தை சுமந்து செல்ல உள்ளனர். இந்நிலையில், தலைநகர் பரிசுக்கு அது கொண்டுவரப்படுவது எப்போது எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில், மொத்தமாக 400 நகரங்களுக்கு இந்த தீபம் கொண்டுசெல்லப்பட உள்ளது. 10,000 பேர் இதனை சுமக்க உள்ளனர்.

வரும் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களிலும் ஒலிம்பிக் தீபம் பரிசின் பல இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.



ஜூலை 14 ஆம் திகதி பரிசில் மத்தியில் இருந்து Hôtel de Ville வரையும், மறுநாள் 15 ஆம் திகதி 11 அம் வட்டாரத்தில் இருந்து 20 ஆம் வட்டாரம் வரையும் கொண்டுசெல்லப்பட உள்ளது.

பின்னர் Place de la République இல் வைக்கப்படும் ஒலிம்பிக் தீபம், ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாளின் போது அங்கிருந்து Canal de Saint-Denis ஆற்றின் வழியாக Bassin de Villette மற்றும் Canal Saint-Martin வரை கொண்டுசெல்லப்பட்டு ஆரம்ப நாள் நிகழ்வுக்கு கொண்டுசெல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்