Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

28 ஆனி 2024 வெள்ளி 13:23 | பார்வைகள் : 365


கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதி, கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைக்குட்பட்ட  இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மொரட்டுவ நகரசபை பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்