காவல் நிலையங்களில் குவியும் மக்கள் கூட்டம், விசேட கூடாரங்கள் அமைத்த காவல்துறையினர்.
29 ஆனி 2024 சனி 07:51 | பார்வைகள் : 3594
நாளையும், அடுத்த வாரமும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற உள்ள நிலையில், காவல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் தமது அன்றாட பணிக்கு இடையூறு இல்லாமல் பல காவல் நிலையங்களில் புதிய கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களை விடவும் இம்முறை அதிக அளவில் வாக்களிக்க பிரான்ஸ் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாலும், விடுமுறை காலம் என்பதாலும் 'procurations' பதில் வாக்காளர் முறையை பலரும் விரும்புவதினாலேயே மக்கள் அதிகம் அளவில் காவல் நிலையங்களில் கூடுகின்றனர் என தெரியவந்துள்ளது.
'procurations' முறையில் வாக்களிக்க (உங்கள் இடத்திற்கு இன்னும் ஒருவர் வாக்களிக்க) விரும்புவோர் காவல் நிலையங்கள் (commissariat de police) நீதித்துறை அலுவலகங்களில் (le tribunal de grande instance) மற்றும் இணையதளங்களில் 'www.maprocuration.gouv.fr' கடைசி நிமிடம் வரை உங்களின் அனுமதியை பெறமுடியும். மேலும் நகரசைகள் இதற்கான உதவிகளை செய்து வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.