பிரான்சில் இனி துவிச்சக்கர வண்டிகளை செலுத்த 'vélo école' துவிச்சக்கர வண்டி. பயிற்சி நிலையங்கள்.
29 ஆனி 2024 சனி 08:22 | பார்வைகள் : 3834
சூழல் மாசடைதல், பூமி வெப்பம் ஆகுதல், இதனால் ஏற்படும் கால நிலை மாற்றங்கள் இவைகளை கருத்தில் கொண்டு வாகன பாவனையை மட்டுப்படுத்த பிரான்ஸ் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக துச்சக்கர வண்டிகள் செலுத்துவதற்கான விசேட பாதைகளை பிரான்சின் பல நகர சபைகள் மாற்றி அமைத்து வருகின்றன.
ஆனாலும் பல விபத்துக்கள் துவிச்சக்கர வண்டிகளை செலுத்துபவர்களால் ஏற்படுகிறது பல வேளைகளில் இத்தகைய விபத்துக்கள் மரணத்தில் முடிவடைகின்றது. துவிச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கு பல முக்கிய முறைகளும், கட்டுப்பாடுகளும் உண்டு.
இதனை கருத்தில் கொண்டு பிரான்சின் பல நகர சபைகள் துவிச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்துள்ளன, சனி, ஞாயிறு தினங்களில் மற்றும் விடுமுறை நாட்களிலும் இத்தகைய பயிற்சி வகுப்புகள் அனுபவம் உள்ள பயிற்சியாளர்களால் இலவசமாக வழங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்த பயிற்சிகள் கட்டாயமாகலாம் எனவும் தெரியவருகிறது.