யூரோ கிண்ணத்தின் வெற்றி பிரபலத்தின் கணிப்பு
29 ஆனி 2024 சனி 08:58 | பார்வைகள் : 885
யூரோ கிண்ணம் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், 24 அணிகளில் 8 வெளியேறி, இனி 16 அணிகளே எஞ்சியுள்ளது.
இந்த நிலையில் BBC செய்தி ஊடகத்தின் கால்பந்து நிபுணர் Chris Sutton என்பவர் அடுத்து நடைபெறும் 8 ஆட்டங்களில் யார் யார் வெல்வார்கள் என்ற தமது கணிப்பை பதிவு செய்துள்ளார்.
அதில், சனிக்கிழமை 29ம் திகதி இத்தாலி அணி சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் யார் வெல்வார் என்பதை Chris Sutton கணித்துள்ளார். ஜேர்மனியுடன் சுவிஸ் அணி தங்களது கடைசி குழு ஆட்டத்தில் சமன் செய்தது.
சுவிஸ் அணி வலுவாகவே இருந்தாலும் இந்த ஆட்டத்தில் இத்தாலி வெல்ல வாய்ப்புள்ளதாக Chris Sutton கணித்துள்ளார். அடுத்து, ஜேர்மனி மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெல்லும் என்றும்,
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இங்கிலாந்து மற்றும் ஸ்லோவாக்கியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெல்ல வாய்ப்புள்ளதாக Chris Sutton கணித்துள்ளார்.
ஸ்பெயின் v ஜார்ஜியா அணிகளுக்கு இடையேயான மோதலில் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெல்ல வாய்ப்பு என கூறுகிறார் Chris Sutton. திங்கட்கிழமை நடைபெறும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெறும் என்றே அவரது கணிப்பாக உள்ளது.
போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறும் அவர், ஜூலை 2ம் திகதி நடக்கவிருக்கும் ருமேனியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வெல்லும் என்றும்,
ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வெல்லும் என்றும் Chris Sutton-ன் கணிப்பாக உள்ளது.