இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் பா.ஜ.,: அகிலேஷ் குற்றச்சாட்டு

30 ஆனி 2024 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 3764
இடஒதுக்கீட்டிற்கு எதிராக பா.ஜ., செயல்படுகிறது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டில்லியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப் பட்டவர்கள், தலித் மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. இந்த 3 சமூக மக்களுக்கு ஜவஹர்லால் நேரு மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வேலைகள் வழங்குவதில்லை.
ஒட்டுமொத்த தேசம்
15 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு வேலை வழங்கியுள்ளன. தற்போதைய அரசு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக செயல்படவில்லை. டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இந்தியாவின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. இவ்வாறு அகிலேஷ் கூறினார்.