Paristamil Navigation Paristamil advert login

ஆசியரை அச்சுறுத்திய மாணவன் - விசாரணை!

ஆசியரை அச்சுறுத்திய மாணவன் - விசாரணை!

30 வைகாசி 2024 வியாழன் 16:54 | பார்வைகள் : 6862


ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்திய மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் ஏற்கனவே காவல்துறையினரால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்தார்.

பிரான்சின் தெற்குப் பகுதியான Carcassonne (Aude) இல் உள்ள பாடசாலை ஒன்றில் வைத்து மாணவன் கைது செய்யப்படுள்ளார். அவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 16 வயதுடைய 'சிறுவன்' எனவும், Fichée S
எனப்படும் கண்காணிப்பு பட்டியலில் உள்ள மாணவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனுக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை பிணக்கு ஏற்பட்டதாகவும், அதையடுத்து ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும், கைது செய்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்