Paristamil Navigation Paristamil advert login

Val-de-Marne : கத்திக்குத்தில் ஒருவர் பலி..!

Val-de-Marne : கத்திக்குத்தில் ஒருவர் பலி..!

31 வைகாசி 2024 வெள்ளி 07:51 | பார்வைகள் : 9225


Val-de-Marne மாவட்டத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில், 79 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

Saint-Maur நகரில் உள்ள கத்தோலிக்க உதவி மையம் ஒன்றின் வாசலில் இச்சம்பவம் நேற்று முன்தினம் மே 29, புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 79 வயதுடைய ஒருவருக்கும் 46 வயதுடைய ஒருவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தை அடுத்து, குறித்த 79 வயதுடைய நபர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இருவரும் உணவுப் பொதியினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போது, இருவருக்கும் இடையே தர்க்கம் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கத்திக்குத்துக்கு இலக்கானவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதலாளி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்