Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கணவனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மனைவி

இலங்கையில் கணவனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மனைவி

31 வைகாசி 2024 வெள்ளி 08:22 | பார்வைகள் : 5681


மண்வெட்டியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவர்  உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பலோகம, கன்திரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 6 ஆம் திகதி தனது வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருக்கும் போது சந்தேக நபரான மனைவி இவரை  மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவர் கடந்த 24 ஆம் திகதி மீண்டும் கெக்கிராவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மகளின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்