Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு

31 வைகாசி 2024 வெள்ளி 10:46 | பார்வைகள் : 1538


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தமது தொழில் ரீதியான ஆதாயத்திற்காக போலியான தரவுகளை உருவாக்கிய வழக்கில் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முன்னாள் ஜனாதிபதி இப்படியான வழக்கில் சிக்கி தண்டனை பெறுவது என்பது அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறை என்றே கூறப்படுகிறது.

ஆனால் இந்த வழக்கில் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற கேள்வி தற்போது பரவலாக எழுந்துள்ளது. இது தொடர்பான முடிவு முழுக்க முழுக்க நீதிபதி Juan Merchan என்பவரால் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

தொழில் ரீதியான ஆதாயத்திற்காக டொனால்டு ட்ரம்ப் போலியான ஆதாரங்களை உருவாக்கியுள்ளது சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளது. இது போன்ற குற்றங்களுக்கு 4 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

ஆனால் ட்ரம்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் தரப்பின் நம்பிக்கையாக உள்ளது. மட்டுமின்றி, முதல் முறையாக ட்ரம்ப் இந்த வழக்கில் சிக்கியுள்ளார். மட்டுமின்றி,இந்த வழக்கு வன்முறை தொடர்பானதும் அல்ல.

ட்ரம்ப் ஒரு முன்னாள் ஜனாதிபதி என்பதையும் நீதிபதி கருத்தில் கொள்ளலாம், அத்துடன் அவருக்கு உளவுத்துறையுடன் தொடர்புள்ளது. மேலும் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளவர்.

இதனால் ட்ரம்புக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது, சமூக சேவைக்கு விதிக்கப்படலாம், கண்காணிப்பில் வைக்கப்படலாம் அல்லது இது போன்ற லேசான தண்டனைகளே வழங்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனையே ட்ரம்ப் தரப்பில் மேல்முறையீடு செய்வார்கள். இதனால் தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதமாகலாம். அத்துடன் மேல்முறையீட்டு செயல்முறை என்பது மாதங்கள், ஆண்டுகள் கூட தாமதமாகலாம்.

தீர்ப்பு வெளியான பின்னர், ட்ரம்புக்கு 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்படும். அதன் பின்னர் முழுமையாக முதல் நிலை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆறு மாதங்கள் அளிக்கப்படும்.

ஆனால் தண்டனை உறுதி செய்யப்பட்டால், ட்ரம்ப் நியூயார்க் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். இறுதியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தையும் நாட வாய்ப்புள்ளது.


மட்டுமின்றி, ட்ரம்ப் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் ஜனாதிபதியாக போட்டியிட எந்த சிக்கலும் இல்லை என்றே கூறப்படுகிரது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்