Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இன்று நள்ளிரவு சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

இலங்கையில் இன்று நள்ளிரவு சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

1 ஆனி 2024 சனி 13:40 | பார்வைகள் : 536


சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01.06.2024) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 03.05.2024அன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1582ரூபா எனவும் கூறப்பட்டிருந்தது.

அதேவேளை லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறித்த தினத்திலேயே குறைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,840 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்