கட்டாயமாக்கப்பட்ட விலாசம்!

1 ஆனி 2024 சனி 16:28 | பார்வைகள் : 8848
பிரான்சில் வசிக்கும் அனைவரும் அவர்களின் விலாசங்களை முறையாக வைத்திருத்தல் அவசியம் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. இன்று ஜுன் முதலாம் திகதி முதல் இந்தச் சட்டம் அமுலிற்கு வருகின்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 1,8 மில்லியன் பேரிற்கு முறையான விலாசங்கள் இருக்கவில்லை. அரசின் கட்டளையின் பேரில் ஒவ்வொரு மாநகரசபைகளும், அனைத்து வீதிகளிற்கும் பெயர் வைத்து வீடுகளிற்கும் இலக்கங்கள் முறையாக நிறுவப்பட்டுள்ளன.
அவசரசிகிச்சை, கடிதப் போக்குவரத்து மற்றும் இணைய சேவைகள் போன்றவற்றை இலகுவாக்குவதற்காகவே «வேறுபாடு, பரவலாக்கம், செறிவு மற்றும் எளிமைப்படுத்துதல்» எனப்பெருள் கொண்ட இந்த «3DS» (différenciation, décentralisation, déconcentration et simplification) திட்டம் 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டு இன்றுடன் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1