Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு எதிரான முதல் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர்.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு எதிரான முதல் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர்.

1 ஆனி 2024 சனி 18:51 | பார்வைகள் : 3849



'JO 24 paris' ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரான்சில் ஆரம்பமாக இன்னும் 55 நாட்கள் இருக்கும் நிலையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க பலவகையான பாதுகாப்பு முறைகள் கையாளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்லாமியவாதிகளால் ஈர்க்கப்பட்ட 18 வயது செச்சென் நாட்டவர் Saint-Etienne  பகுதியில் ஒலிம்பிக் போட்டிகளின் கால்பந்து நிகழ்வுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வந்ததினால் கைதுசெய்யப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டு பயங்கரவாத சதிக்காக குற்றம் சாட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காவலில் வைக்கப்பட்டதாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (Pnat) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin "குறித்த நபர் காவல்துறையினரின் கண்காணிப்பு வட்டத்தில் இல்லாதவர்' "fiché S" கோப்பிலும் இடம்பெறாத சந்தேக நபர் "தீவிரவாதி" என்று "எதுவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கவும் இல்லை ஆனால் 
அவரது கணனி, தொலைபேசி, அவரின் ஊடகத் தொடர்புகளிலும் மற்றும் நாங்கள் மேற்கொண்ட தேடல்கள் மூலம், இந்த நபர் பயங்கரவாத அமைப்பான ஜிஹாதி சித்தாந்தத்தின் பெயரில், வன்முறை நடவடிக்கைகளில்  நடவடிக்கை எடுக்க விரும்புகிறார் என்ற உண்மையை எங்களால் நிறுவ முடிந்தது என தெரிவித்தார்.

மேலும் இவரின் பயங்கரவாத நடவடைக்கையை முறியடித்ததின் மூலம் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு எதிரான முதல் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையை நாங்கள் முறியடித்து உள்ளோம், இந்த தாக்குதல் 2017ம் ஆண்டில் இருந்து பயங்கரவாதத்திற்கு எதிரான பாரிய முறியடிப்பு தாக்குதலில் 50வது தாக்குதல் எனவும்  அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்