பிரான்சில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது மருத்துவத்துறை. மருத்துவர்களுக்கான தொழில் சங்கம்.
2 ஆனி 2024 ஞாயிறு 07:06 | பார்வைகள் : 2975
கடந்த மே 30ம் திகதி பத்தில் ஒன்பது மருத்துவர்கள் என்ற கணக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பின்னர் மருத்துவர்களுக்கான தொழில் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2018ம் ஆண்டில் இருந்து படிப்படியாக மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகரித்து வந்த நிலையில் 2023ம் ஆண்டில் சுமார் 4925 மருத்துவர்கள் பற்றாக்குறை பிரான்சில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பற்றாக்குறையினால் நோயாளர்களின் வீதம் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த பற்றாக்குறை காரணமாக மருந்தகங்களின் விற்பனையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இதனால் பிரான்சில் பல மருந்தகங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பற்றாக்குறை குறித்து அரசும் சுகாதாரத் துறையும் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் போனால் பிரான்சில் மருத்துவ சிவில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.