Paristamil Navigation Paristamil advert login

 கஞ்சா போதைப் பொருளை அதிகமாக பயன்பாடுத்தும் முதியவர்கள்

 கஞ்சா போதைப் பொருளை அதிகமாக பயன்பாடுத்தும் முதியவர்கள்

2 ஆனி 2024 ஞாயிறு 07:45 | பார்வைகள் : 6076


கனடாவில் முதியவர்கள் கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டினால் அபாயங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சா போதைப் பொருள் கலந்த சில இனிப்பு வகைகளை முதியவர்கள் உட்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கஞ்சா கலந்த இனிப்பு பண்டங்களை உட்கொள்வதன் மூலம் முதியவர்கள் நோய்வாய்ப்பட்ட அதிகளவு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

நான்கு லட்சம் சிரேஸ்ட பிரஜைகள் கஞ்சா பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், முதியவர்கள் கஞ்சா பயன்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்