Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையில் சீரற்ற வானிலை:  பாடசாலைகளுக்கு விடுமுறை

2 ஆனி 2024 ஞாயிறு 08:19 | பார்வைகள் : 4084


இலங்கை முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதனிடையே, பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டு பெல் 212 ரக உலங்கு வானூர்திகளும், பெல் 412 ரக உலங்குவானூர்தி ஒன்றும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகமாக உள்ளதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் வெளியேறத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்