Paristamil Navigation Paristamil advert login

15வது முறையாக UEFA சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ரியல் மாட்ரிட்  அணி!

15வது முறையாக UEFA சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ரியல் மாட்ரிட்  அணி!

2 ஆனி 2024 ஞாயிறு 08:21 | பார்வைகள் : 3347


UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பொருஸ்ஸியா டார்ட்மண்ட் அணியை வீழ்த்தி பட்டத்தை வென்றது.

லண்டன் Wembley மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் முதல் பாதியில் சம பலத்துடன் மோதின.

இதனால் இருதரப்பிலும் எந்த கோலும் விழவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் ரியல் மாட்ரிட் (Real Madrid) வீரர்கள் மிரட்டினர். 

ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் டேனி கார்வஜல் (Dani Carvajal) அபாரமாக கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து மற்றொரு ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் (Vinicius Junior) 83 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

கடைசிவரை பொருஸ்ஸியா டார்ட்மண்ட் (Borussia Dortmund) அணியால் கோல் அடிக்க முடியாததால், ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 15வது முறையாக ரியல் மாட்ரிட் அணி UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.    

வர்த்தக‌ விளம்பரங்கள்